எக்சைஸ் பண்ண வேற இடமே இல்லையா…? நெடுஞ்சாலை பெயர் பலகையில் உடற்பயிற்சி… வைரல் வீடியோ..!

எக்சைஸ் பண்ண வேற இடமே இல்லையா…? நெடுஞ்சாலை பெயர் பலகையில் உடற்பயிற்சி… வைரல் வீடியோ..!

நெடுஞ்சாலை பெயர் பலகையில் ஒரு நபர் உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் ரிலீஸ் வீடியோக்கள் பலரையும் கவர்ந்து வருகின்றது. ரீல்ஸில் எப்படியாவது ட்ரெண்டிங்கில் வந்துவிட வேண்டும் என்பதற்காக விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இளைஞர்கள் ரிலீஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். பொதுவாக இளைஞர்களுக்கு தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் பிடிக்கும் இதனால் உடற்பயிற்சி செய்வார்கள்.

ஆனால் ஒரு நபர் நெடுஞ்சாலையின் பெயர் பலகையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேசம் மாநிலம், அமேதியில் 30 அடி உயரத்தில் உள்ள நெடுஞ்சாலை பெயர் பலகையில் சட்டை இல்லாமல் ஒரு நபர் அதன் மீது ஏறி உடற்பயிற்சி செய்யும் ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அந்த ரீல்ஸ் வீடியோவின் பின்னணியில் மறைந்த பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒன்று ஒளித்து வருகின்றது. இந்த வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகிறார்கள். இதனால் அமேதி போலீசார் அவர் யார் என்று தேடி வருகிறார்கள். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.