Latest News
தொடரும் பணிச்சுமை மரணங்கள்… வேலை செய்யும்போதே நாற்காலியில்… பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…!
பணிச்சுமை காரணமாக வேலை செய்யும் போது நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் தொடர்ந்து பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆவலாவதும், மரணமடைவதும் தொடர்கதையாகி வருகின்றது. பணியிடத்தில் சூழலால் ஏற்படும் அழுத்தங்களால் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அளவுக்கு அதிகமான பணிச்சுமையால் கேரளாவை சேர்ந்த 26 வயதான இளம்பெண் அன்னா ஜெபஸ்டின் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது லக்னோவில் தனியார் வங்கியில் வேலை பார்த்த பெண் ஒருவர் பணிச்சுமையால் உயிரிழந்திருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இயங்கி வரும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்த சதப் பாத்திமா என்கின்ற 45 வயதான பெண்மணி நேற்று வேலை செய்து கொண்டிருந்த போதே நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார்,
அதிக பனிச்சுமையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் சக ஊழியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பாத்திமாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான் இது குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று காவல் உதவி ஆணையர் ரதராமன் சிங் தெரிவித்திருக்கின்றார். இருப்பினும் இந்த உயிரிழப்பு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்திற்கு ஏற்றபடி வேலை கொடுக்காமல் அதிக வேலையை கொடுத்து மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறார்கள் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.