Latest News
வீட்டில் உள்ள பிரிட்ஜில் 30 துண்டுகளாக பெண்ணின் உடல்… பெங்களூருவில் கொடூர சம்பவம்…!
பெங்களூரில் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் 30 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
பெங்களூருவில் மல்லேஸ்வரம் வியாலிகாவல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்தார்கள். இதையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்த நிலையில் வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த 165 லிட்டர் சிங்கிள் டோர் பிரிட்ஜில் மனித உடலானது 30 துண்டுகளாக புழுக்கள் அரித்த நிலையில் இருந்திருக்கின்றது.
அந்த உடலானது அந்த வீட்டில் வசித்து வந்த 29 வயது பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பெங்களூருவில் வீடு எடுத்து மால் ஒன்றில் வேலை செய்து வந்தார் எனவும் போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். அந்தப் பெண் வெகு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்த போலீசார் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள் பாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் சென்னையில் இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக உடல் வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மற்றொரு சம்பவம் பெங்களூரில் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.