Latest News
சாப்ஸ்ஸ்டிக்-கில் அரிசியை சாப்பிட்டு… வித்தியாசமான உலக சாதனை செய்த இளம்பெண்… வைரல் வீடியோ…!
சாப்ட் ஸ்டிக்ஸில் அரிசியை சாப்பிட்டு வித்தியாசமான உலக சாதனையை இளம்பெண் செய்து காட்டி இருக்கின்றார்.
சீனா மற்றும் ஜப்பான் போன்ற நகரங்களில் வழக்கமாக உணவுகளை சாப்பிடுவதற்கு கைகளுக்கு பதிலாக சாப்ஸ்ஸ்டிக் என்ற ஒரு பற்றுகுச்சிகளை பயன்படுத்துவது வழக்கம். அந்த நாட்டில் நூடுல்ஸ் போன்ற உணவுகளை இதில் தான் சாப்பிடுவார்கள். இதை பார்ப்பதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் இதனை சரியாக பயன்படுத்த நிறைய பயிற்சி தேவை.
சாப்ஸ்ஸ்டிக் கொண்டு உணவு சாப்பிடுவதற்கு அதிக பயிற்சி தேவை. இருப்பினும் வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் சாப்ஸ்ஸ்டிக்கை பயன்படுத்தி அரிசியை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தானியங்களை சாப்ஸ்ஸ்டிக் கொண்டு சாப்பிடுவது என்பது மிகவும் கடினமானது.
வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் என்ற பெண் ஸ்டாப் ஸ்டிக் மூலம் அரிசியை எடுத்து சாப்பிடும் ஒரு சவாலான பணியை செய்திருக்கின்றார். சாப்ஸ்ஸ்டிக் பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு காட்டி உலக சாதனை படைத்திருக்கின்றார். இவரின் சாதனையை வீடியோவாக எடுத்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.
View this post on Instagram