national
தனியாக நடைபயிற்சி செய்யும் பெண்களே… கொஞ்சம் கவனமாய் இரு… எச்சரித்த போலீஸ்…!
அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்.
பெங்களூருவில் கோணங்குண்டே என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு பெண் தனியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பின்பக்கத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த ஒரு நபர் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் ராஜஸ்தாணை சேர்ந்தவர் என்றும் பெங்களூரில் வசித்து வரும் அவர் தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்த சமயத்தில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த கட்டிடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த காரணத்தினால் அதில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருந்தது.
அதில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து பின் சாலையில் வேகமாக ஓட அவரை பின்தொடர்ந்து விரட்டிய சென்ற அந்த நபர் பின்பக்கத்தில் இருந்து கட்டி அணைக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பியோடிய காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் பாலியல் அத்துமிரலில் ஈடுபட்ட நபரை வீசி தேடி வருகிறார்கள். மேலும் ஆள் நடமட்டுமில்லாத பகுதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடும் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.