national
வினையாக மாறிய விளையாட்டு… insta-வில் பேக் அக்கவுண்ட்… பெண் செய்த விபரீத செயல்..!
இன்ஸ்டவில் பேக் அக்கவுண்ட் மூலமாக காதல் வயப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயதான இளம் பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய வேண்டும் என்று எண்ணி மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை உருவாக்கி இருக்கின்றார். இந்த போலியான கணக்கு மூலம் தோழியோடு பேசி விளையாடியிருக்கின்றார்.
அப்போது instagramல் தன்னுடன் பேசிய மணிஷ் மீது அந்தப் பெண் காதல் வயப்பட்டு இருக்கின்றார். காதல் அதிகமானதால் அந்த பெண் அந்த நபரை சந்திக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார். அப்போது அவரது தோழி சிவம் பாட்டீல் என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கி அந்த கணக்கில் நான்தான் மனுஷன் அப்பா நீங்கள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக கூறியிருக்கின்றார்.
கற்பனையான அவளது காதலர் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கடந்த ஜூன் 12-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பெண்ணின் மொபைல் ஃபோனை பார்த்த பெற்றோர்கள் அதிலிருந்து மெசேஜ்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
பின்னர் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விசாரணை செய்த போது இளம்பெண் மரணத்திற்கு காரணம் அவரது தோழிதான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த தோழியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.