Connect with us

மாதம் ஒருமுறை மட்டும் குளிக்கும் கணவன்… நாத்தம் தாங்காமல் விவாகரத்து கேட்ட மனைவி…!

Latest News

மாதம் ஒருமுறை மட்டும் குளிக்கும் கணவன்… நாத்தம் தாங்காமல் விவாகரத்து கேட்ட மனைவி…!

கணவன் மாதம் ஒரு முறை மட்டும் குளிப்பதால் துர்நாற்றம் தாங்க முடியாமல் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி 40 நாட்களில் தனது கணவனின் வித்தியாசமான பழக்கத்தால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.  ஆக்ராவை சேர்ந்த அந்தப் பெண் கூறுகையில் அவரது கணவர் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கின்றார்.

இதனால் அவர் மீது பொறுத்துக் கொள்ளவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக திருமணம் ஆகி 40 நாட்களுக்கு பிறகு இந்த திருமண பந்தத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததாக அவர் கூறியிருந்தார். அந்த பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மட்டும் தெளித்துக் கொள்வாராம்.

திருமணமாகி மனைவியின் வற்புறுத்தல் காரணமாக 40 நாட்களில் ஆறு முறை குளித்தலாக தெரிவித்திருந்தார். பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் என்று கூறி விவாகரத்து கோரி இருக்கிறார்கள். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கின்றார்.

இறுதியில் கணவர் மனம் திறந்தி அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்துவதாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இருப்பினும் அந்தப் பெண் தனது கணவருடன் இனி சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகின்றது. இதனால் அடுத்ததாக இந்த தம்பதிகளுக்கு ஆலோசனை மையத்தில் ஆலோசனை வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

More in Latest News

To Top