போலீஸ் சீருடைலையே பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர்.. அதிரடி நடவடிக்கை…!

போலீஸ் சீருடைலையே பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலர்.. அதிரடி நடவடிக்கை…!

சீருடையில் தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தில் நடித்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ரத்லாம் மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கான ஒரு தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. அந்த மையத்தை ஊக்குவிப்பதற்காக பெண் காவலர் ஒருவர் விளம்பரத்தில் நடித்திருக்கின்றார். அவர் தனது போலீஸ் சீருடை அணிந்தவாறு அந்த மையத்தை விளம்பரப்படுத்தி இருக்கின்றார்.

பெண் காவலர் நடித்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் படுவைரலானது. இதையடுத்து ரத்லாம் காவல் கண்காணிப்பாளர் ராகுல் லோதா கூறியதாவது: “ஒரு பெண் காவலர் தனது சீருடையில் ஒரு தனியார் மையத்தை ஊக்குவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.