national
ஓநாய்கள் தாக்கி குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு… அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்…!
உத்திரபிரதேச மாநிலம் இந்தோ நேபாள எல்லை மாவட்டமான பக்ரைசில் உள்ள மகாசி தொகுதியின் 30 கிராமங்களில் ஓநாய்கள் கூட்டத்தால் ஆறு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டார்கள். 26க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். இந்த ஓநாய்களை பிடிப்பதற்கு வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறார்கள்.
ஓநாய்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் இப்பகுதியில் ஒரு மாதத்திற்கு மேலாக கிராம மக்கள் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்கள் இரவு நேரங்களில் காவல் காத்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். மேலும் இதுவரை 3 ஓநாய்களை பிடித்துள்ள வனத்துறையினர் அவைகளை லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
வனத்துறையினர் தெர்மல் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஓநாய்களை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் ஜூலை 17ஆம் தேதி ஓநாய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக முதல் சம்பவம் பதிவானது. அதையடுத்து கடுமையாக ஓநாய் கூட்டத்தை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
6 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓநாய் வழித்தடங்கள் 4 பொறிகள் வைத்துள்ளோம் என்று தெரிவித்திருக்கின்றார். மனிதர்களை மட்டுமே தாக்கும் 5 முதல் 6 ஓநாய்கள் இப்பகுதியில் இருக்கின்றது. மேலும் மக்கள் குழந்தைகளுடன் குடும்பமாக திறந்த வெளியில் தூங்க வேண்டாம் என்று அப்பகுதியில் இருப்பவர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.