national
ஸ்டூடண்ட் ROCK… டீச்சர் SHOCK… செல்போனின் பயன்கள் குறித்து மாணவன் எழுதிய அசர வைத்த விளக்கம்…!
செல்போன்கள் தற்போது மனிதர்களிடம் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாக செல்போன்கள் மாறி உள்ளது. அதற்கு செல்போன்களின் பயன்கள் குறித்த பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர் ஒருவர் அசத்தலாக பதில் அளித்து இருக்கின்றார்.
அந்த விளக்கத்தைப் பார்த்த ஆசிரியரும் அவருக்கு முழு மதிப்பெண்களை கொடுத்து பாராட்டி இருக்கின்றார். கேள்வி என்னவென்றால் செல்போன்களின் பயன்கள் என்ன என்பதுதான். அதற்கு பதில் அளித்த மாணவன் போன் இல்லை என்றால் மனநிலை நன்றாக இருக்காது. மனநிலை இல்லை என்றால் படுக்கத் தோன்றாது. படிக்காமல் வேலை கிடைக்காது, வேலை இல்லை என்றால் பணம் இருக்காது.
பணம் இல்லை என்றால் சாப்பாடு கிடையாது. சாப்பிடாமல் உடல் எடை குறையும். உருவம் மாற்றமடையும், உருவம் நன்றாக இல்லை என்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள். யாரும் விரும்பவில்லை என்றால் கல்யாணம் நடக்காது. கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம்.
தனிமையாக இருப்பதால் கவலை ஏற்படும். மனக்கவலை அழுத்தமாக மாறும். மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியில் மரணம் ஏற்படும் என்று பதில் அளித்து இருக்கின்றார். இதை பார்த்த ஆசிரியர் அசந்து போய் அவருக்கு முழு மதிப்பினை வழங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது..