இந்தோனேசியாவில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்களை அதிகரித்து வருகின்றனர். இந்தோனேசியா கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் இந்த வகையான திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்தோனேசியாவில் உள்ள பன்கக் என்கின்ற பகுதியில் சுற்றுலா பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகின்றன.
மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகை தருகிறார்கள். மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்குள்ள சுற்றுலா பயணிகள் காசு கொடுத்து அந்த ஊர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி இருக்கும் காலம் வரை அந்த பெண்கள் அவர்களுக்கு மனைவியாக இருப்பார்கள். சுற்றுலா பயணிகள் கிளம்பிய பிறகு அந்த திருமணம் செல்லாமல் போய்விடும்.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டு பெண்களை இது போன்ற செயலுக்கு கட்டாயப்படுத்தி தள்ளப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. பெண்களை அழைத்து வருதால் சுற்றுலா பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்தியேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகின்றது.
இந்த முறையில் ஒரு பெண்ணுக்கு 20 முறை கூட திருமணம் நடைபெற்று வருகின்றதாம். இதனால் சர்வதேச அளவில் இந்த முறைக்கு கண்டனம் எழுந்து வருகின்றது. விஜய் சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே திரைப்படத்தில் கான்ட்ராக்ட் அடிப்படையில் திருமணம் செய்து கொள்வது போல் நிஜத்தில் உண்மையாகி வருகிறார்கள் இந்தோனேசியா சுற்றுலா பயணிகள்.