national
கறி சமைக்க சொன்னது ஒரு குத்தமா…? செங்கலுடன் கணவன் மேல் ஏறி அமர்ந்து… வெளியே வந்து விழுந்த ‘மூளை’…!
கறி சமைக்க சொன்ன அசைவ பிரியரான கணவரின் மண்டையை உடைத்து மனைவி மூளையை உருவி எடுத்த சம்பவம் உத்திர பிரதேசத்தில் அரங்கேறி இருக்கின்றது.
உத்திரபிரதேச மாநிலம், ஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹதுடா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சத்பால். இவரின் மனைவி காயத்ரி தேவி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். கல்யாணம் ஆனதில் இருந்து இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கின்றது. இருவரும் அடிக்கடி தகராறு செய்து சண்டை போட்டுக் கொள்வார்கள்.
சில சமயங்களில் மனைவியின் உச்சகட்ட டார்ச்சரால் ஆத்திரமடையும் சத்பால் திடீரென்று அவரை தாக்கி விடுவாராம். இப்படி இவர்கள் வீட்டில் அடிக்கடி நடப்பதால் அக்கம் பக்கத்தினர் கண்டுகொள்ளாமலேயே இருந்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் ஆட்டுக்கறி வாங்குவதற்காக 300 ரூபாய் தரும்படி மனைவி காயத்ரியிடம் கேட்டிருக்கின்றார் சத்பால்.
ஆனால் 300 ரூபாயை கொடுப்பதற்கு காயத்திரி மறுத்து விட்டிருக்கின்றார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதில் வழக்கம் போல் காயத்ரியை சத்பால் கடுமையாக தாக்கியிருக்கின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி சத்பாலை தர தரவென்று வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து தாக்கி இருக்கின்றார். கீழே கிடந்த செங்கலை எடுத்து கணவரின் மார்பு மீது ஏறி அமர்ந்து தலையிலேயே கடுமையாக தாக்கி இருக்கின்றார்.
இதில் சத்பாலின் மண்டை இரண்டாக உடைந்தது. அப்போதும் விடாமல் தாக்கியதில் கணவரின் தலை நசுங்கி போனது. இதனை தொடர்ந்து காயத்திரி கண்ணதிரே சத்பால் துடிதுடித்து உயிரிழந்தார். அதையடுத்து அவரின் மூளையை கையில் எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த சம்பவத்தில் அவருக்கு எந்தவித ஐயமும் இல்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் யாருமே சத்பாலை காப்பாற்றுவதற்கு முன் வரவில்லை. அதற்கு மாறாக செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. காயத்ரி சைவ உணவை விரும்புபவர். ஆனால் சத்பால் இறைச்சி பிரியராம். அதனால் அடிக்கடி சிக்கன், மட்டன் செய்து தரச் சொல்லி காயத்ரியை தொந்தரவு செய்து வந்திருக்கின்றார். அன்று உண்மையாகவே காயத்ரியிடம் பணம் இல்லாததாலும் அவரது கணவர் மட்டன் சாப்பிட ஆசைப்பட்டு 300 ரூபாய் வேண்டும் என்று கேட்டு காயத்ரியை போட்டு அடித்து இருக்கின்றார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவரை செங்கலால் அடித்து தாக்கி இருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.