national
சீட்டு பிடிக்க தள்ளுமுள்ளு.. போலீஸ் அடித்த அடியில் வெளியில் வந்த இளைஞரின் குடல்.. வைரலாகும் வீடியோ..!
ரயிலில் சீட்டு பிடிப்பதற்காக பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்போது போலீசார் அடித்த அடியில் ஒரு இளைஞர்களுக்கு குடல் வெளியே வந்துள்ளது.
பீகாரில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சீதாமாரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரயில் வந்து இருக்கின்றது. அப்போது அதில் தங்களது உறவினரை ஏற்றி விடுவதற்காக முகமது பர்கான் என்ற இளைஞர் வந்திருக்கின்றார்.
நடைமேடையில் ரயில் வந்ததும் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி சீட்டு பிடிப்பதற்காக பயணிகள் அனைவரும் ஒரே சமயத்தில் ட்ரெயினில் ஏற முயற்சி செய்து இருக்கிறார்கள். அப்போது பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் பயணிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள் இருவரும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். பர்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில் அவரது குடல் வெளியே வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
🚨Warning Graphic🚨 A Muslim youth Furkhan who had went to see off his friend on Pupri railway station was brutally beaten by GRP jawans that his stomach burst open and intestine spilled out #GraphicContent
pic.twitter.com/LrRRFzr3tL— Rafael Trujillo 🇩🇴 (@haitiansRdirty) July 26, 2024
அதனால் காவலர்கள் அடித்த அடியில் குடல் தையல் வழியாக வெளியே வந்தது. இதையடுத்து அவர் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே எஸ்பி உள்ளிட்ட இரண்டு கான்ஸ்டபில்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.