national
வயநாடு நிலச்சரிவு… 25 தமிழர்களின் நிலை என்ன…? கதறும் உறவினர்கள்…!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 25 தமிழர்களின் நிலை என்ன என்பதை குறித்து தற்போது வரை தெரியாமல் இருக்கின்றது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29-ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டகை, சூரழ் மலை, அட்டமலை, நூல்புழா ஆகிய பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்து போனது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று நான்காவது நாளாக மீட்டு பணி தொடர்ந்து நடைபெற்ற வருகின்றது.
மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனரே பயன்படுத்தி யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதனுடைய வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக மீட்பு பணி நீடித்து வருகின்றது.
ராணுவம், தேசிய மீட்பு படையினர் தொடர்ந்து மீட்டு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கிய 25 தமிழர்களின் நிலை என்னவென்று தற்போது வரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முண்டகை, சூரழ் மலை, மேர்படி ஆகிய பகுதிகளில் வசித்து வந்த தமிழர்கள் 22 பேரும், வயநாட்டிற்கு சென்ற மூன்று பேர் என மொத்தம் 25 தமிழர்கள் மாயமாக இருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.