national
காலையில் கல்யாணம்… மாலையில் குத்திக்கொண்ட புதுமண தம்பதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
காலையில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் மாலையில் ஒருவரை ஒருவர் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டம், தங்கவயல் ஆண்டரசன் பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட செண்பகரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன் குமார். இவருக்கு 30 வயதாகின்றது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த லக்கிதா ஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இரு வீட்ட சமூகத்துடன் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. மதியம் புதுமண தம்பதிகளை முனியப்பாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக தங்க வைத்திருக்கிறார்கள். அப்போது இந்த தம்பதிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.
இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்தன. இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அதற்குள் லக்கிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லக்கிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.
இதில் நவீன் குமார் படுகாயம் அடைந்து இருக்கின்றார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதி ஒருவர் இப்படி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.