national
தண்ணீரில் மூழ்கிய பாலம்… கர்ப்பிணி மனைவியை துணிச்சலாக அழைத்துச் சென்ற கணவர்… வைரலாகும் வீடியோ…!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 24ம் தேதி இரவில் கனமழை கொட்டியது. இதனால் வயநாட்டில் இருக்கும் முண்டகை, சூரல்மலை, மேற்படி ஆகிய மலை கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனனர். அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்தவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடக்கப்போகும் விபரீதத்தை நினைத்துக் கூட பார்க்கவில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
பல மக்கள் அநியாயமாக புதைந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுவரை நிலச்சரிவு வீழ்ச்சிக்கு 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் வயநாட்டின் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திற்கு நடுவே தண்ணீரில் மூழ்கிய பாலத்தில் தனது நிறைமாத கர்ப்பிணியை காரில் கணவர் துணிச்சலாக ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.