national
வயநாட்டு நிலச்சரிவு… தீவிர படுத்தப்பட்ட தேர்தல் பணி… இந்த முறை புதிய முயற்சி…!
கேரள மாநில வயநாட்டில் ஏற்பட்டிருந்த நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் போய் இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராணுவப்படையினர், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ குழு என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் பயன்படுத்தப்படும் ராடர்கள் மற்றும் ட்ரோன்கள், ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்கள் மற்றும் மோப்ப நாய்கள் உள்ளடவைகளும் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் மண்ணுக்குள் புதைந்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் உடல்கள் மீட்கப்பட்டது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்களும் பத்து நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தங்களது தேர்தல் பணியை முடித்துக் கொண்டு நேற்றுதான் அவர்கள் நாடு திரும்பினார்கள். அதே நேரத்தில் காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டிய இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் புதிய முயற்சியாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தேர்தலுக்கான அனைத்து வழிகளும் தீர்ந்து விட்ட காரணத்தால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் பங்களிப்புடன் மெகா தேடுதல் பணி இன்று மீண்டும் நடைபெற்றது. தேடுதல் பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் இன்று காலை 9 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடுதலான நபர்கள் தேடுதல் பணியில் களம் இறங்கி இருக்கிறார்கள். காணாமல் போனவர்கள் தேடும் பணி இன்று 13-வது நாளை எட்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.