national
வயநாட்டு நிலச்சரிவு… தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை… 6-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!
வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, அட்டமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய கிராமங்களில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனன. அங்கிருந்த மக்கள் பலரும் உயிருக்கு போராடி சிக்கி தவித்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராணுவ மீட்பு பணிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றது. செல்போன் ஜிபிஎஸ், ரேடார் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி காணாமல் போனவர்களை மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இன்னும் 200 பேரை காணவில்லை என்று கூறி வருவதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்திருக்கின்றது.
148 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 34 பெண்கள், 36 ஆண்கள், 11 குழந்தைகள் என 81 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 26 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து வருகின்றது.
வயநாடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 91 முகாம்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் வயநாட்டு பேரழிவை மாநில பேரிடராக அறிவித்து கேரளா அரசு ஆணை தற்போது வெளியிட்டுள்ளது. வயநாடு பகுதிகளில் வசித்தவர்களை வேறு இடத்திற்கு குடியமர்த்த கேரள முதல்வர் பினராய் விஜயன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.