national
சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டு போல்… அழிந்து போன ஒரு கிராமம்… அதிர்ச்சி சம்பவம்…!
கடந்த 29ஆம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. முண்டகை, சூரல்மலை மற்றும் மேர்படி ஆகிய கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 316 பேர் பலியாகி இருக்கிறார்கள். இன்னும் பலர் காணாமல் போய் உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் அந்த கிராமங்கள் தவிர அதை சுற்றி இருந்த ஒரு சில குக்கிராமங்களும் நிலசரிவில் சிக்கி மண்ணோடு மண்ணாக புதைந்து போய் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது முண்டகை கிராமத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மலை பாங்கான இடத்தில் இருக்கும் கிராமம் பூஞ்சிரித்தோடு.
இந்த குக்கிராமத்தில் மொத்தம் 118 பேர் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார்கள். ஒரே நள்ளிரவில் அந்த குக்கிராமம் மொத்தமும் காணாமல் போயிருக்கின்றது. அந்த நிலச்சரியுடன் சேர்த்து ஆர்ப்பரித்து வந்த காற்றாற்று வெள்ளம் அந்த கிராமத்தையே மண்ணோடு மண்ணாக மூடிவிட்டது.
அங்கு வசித்த மக்களின் நிலை என்ன? என்பது குறித்து தெரியவில்லை. சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டு என்ற கிராமம் காணாமல் போனது போல் இந்த கிராமம் அழிந்து போய் உள்ளது என்று அக்கம் பக்கத்தை சேர்ந்த பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.