national
வயநாடு நிலச்சரிவு… மீட்பு பணியிலிருந்து விடைபெற்ற ராணுவக்குழு… வைரலாகும் வீடியோ…!
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி முண்டகை, சூரல்மலை, மேப்படி, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட கிராமங்கள் மண்ணோடு மண்ணாக அழிந்து போயின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு பணியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணுவ வீரர்கள் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணி துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். மீட்பு பணியில் ஈடுபட்டு தற்போது நாடு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைதட்டி உற்சாகம் எழுப்பி இருந்தார்கள். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வருகின்றது. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அனைவரும் தங்களது மரியாதையை கொடுத்தனர்.