Connect with us

வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!

national

வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 30ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாக இருந்தது. நள்ளிரவு வேலையில் ஏற்பட்ட இந்த கோர சம்பவம் காரணமாக வீட்டுக்குள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்து போயினர்.

வயநாடு நிலச்சரியில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 100 பேரை காணவில்லை என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்பு பணியினர் மீட்டெடுத்திருக்கிறார்கள். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது நிதி உதவியை வழங்கி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தமிழகம் சார்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா, கார்த்திக், ஜோதிகா, விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் தனுஷ் கேரள நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கின்றார். தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி பிரபலங்களும் தொடர்ந்து கேரளாவுக்கு நிதி உதவி வழங்கிய வருகிறார்கள்.

More in national

To Top