Connect with us

வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

national

வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

கேரளா மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சூரல்மலை, மேம்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக அழிந்தது, பூஞ்சிரிமட்ட,ம் வெள்ளரிமலை, அட்டமலை ஆகிய பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பலத்த மற்றும் காற்றாற்று வெள்ளம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் மண்ணாக புதைந்து போனது. இந்த பயங்கர சம்பவத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி இருக்கின்றன.

தொடர்ந்து மீட்பு பணியினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். 9-வது நாளாக மீட்பு பணி நீடித்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டி இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

மேலும் மாயமாகி இருக்கும் 100-க்கும் அதிகமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகின்றது. அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் வனத்துறையினர் மீட்பு குழு 12 பேர் அடங்கி சிறப்பு குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டார்கள்.

பள்ளத்தாக்கு பகுதிகளில் 6 கிலோ மீட்டர் வரை சென்று தேடினார்கள். அதில் மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகளில் மேலும் மூன்று நாட்களாக பணி தொடங்கும் என்று கூறப்படுகின்றது.

More in national

To Top