national
300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!
வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது.
கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேம்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மூன்று நாட்களாக மீட்பு பணியாளர் தொடர்ந்து மீட்பு பணி வேலைகளை செய்து வருகிறார்கள். ராணுவம், விமானப்படை, கடற்கரையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி தொடர்ந்து உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் உள்ளவர்களை மீட்டு வருகிறார்கள்.
காயமடைந்தவர்களை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது. அதாவது தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவிலிருந்து 1500 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பலர் மாயமாக இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இது கேரள மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.