national
வயநாடு நிலச்சரிவு… யானைகளின் கருணையால் உயிர் தப்பிய குடும்பம்… நெகழ்ச்சி சம்பவம்..!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவித்த குடும்பம் ஒன்று யானைகளின் கருணையால் உயிர் தப்பிய சம்பவம் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. 5-வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நிலச்சரிவில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்கி விட்டது. இந்த சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முண்டகை என்ற பகுதியில் ஹாரிசன் தேயிலை தோட்டத்தில் 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் சுஜாதா. இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் மிருதுளா ஆகியோருடன் வசித்து வந்திருக்கின்றார். நிலச்சரிவின் போது இவர்களின் குடும்பமானது யானையின் கருணையால் உயிர் தப்பிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இது தொடர்பாக சுஜாதா கூறியதாவது “கடந்த திங்கட்கிழமை இரவு கன மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவை தாண்டி பெய்து வந்ததால் செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து வீட்டை சுற்றி தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பி ஓடினோம். காபி மரங்கள் மூடப்பட்ட அந்த குன்றின் யானைகளும் தஞ்சம் அடைந்திருந்தது.
எங்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் யானை கூட்டம் ஒன்று நின்றிருந்தது. அதன் கால்களுக்கு இடையில் தான் இரவு பொழுதை கழித்தோம். யானையின் கண்களை பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது. எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அந்த யானையிடம் மன்றாடி கேட்டோம்.
எங்களை பார்த்த அந்த யானையின் கண்களில் இருந்து தண்ணீர் துளிகள் வரத் தொடங்கின. பின்னர் மறுநாள் காலை வரை அந்த யானையின் கால்களுக்கு இடையில் தான் எங்களின் வாழ்க்கையை கழித்தோம். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று அவர் கூறினார்.