national
வயநாடு நிலச்சரிவு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும்… சித்தராமையா அதிரடி..!
வயநாட்டின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பாக 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்பி ஆன ராகுல் காந்தி உறுதி அளித்தார்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்கும் விதமாக நூறு வீடுகள் கர்நாடக அரசு சார்பாக கட்டித் தரப்படும் என்ற மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் கேரளாவிற்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் இருப்போம் என்று பினராய் விஜயன் அவர்களுக்கு உறுதி அளிக்கின்றேன்.
மேலும் இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா சார்பாக 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாங்கள் அறிவித்தோம். ஒன்றாக நாங்கள் மீண்டும் கட்டி எழுப்புவோம் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்போம்.