Latest News
அடேங்கப்பா… பெங்களூருவில் தண்ணீருக்காக மாதம் 25 ஆயிரம் செலவு செய்யும் மக்கள்… வெளியான தகவல்…!
பெங்களூருவில் தண்ணீருக்காக மட்டும் மாதம் 25 ஆயிரம் ரூபாய் மக்கள் செலவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏராளமான குடியிருப்புகள் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் ஐடி கம்பெனிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மாநகரில் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகின்றது. குடிநீருக்காக பொதுமக்கள் பல மணி நேரம் கேனுடன் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகின்றது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். மேலும் சில பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
பெங்களூருவில் நிலவிய குடிநீர் பிரச்சினையால் பலர் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி விட்டன. இந்நிலையில் பருவமழை கை கொடுத்தால் பெங்களூரு மாநகராட்சி நிலைமையை சில நாட்கள் சமாளித்தது. இதன் காரணமாக குடிநீர் பிரச்சனை நீங்கியது. இருந்தாலும் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மகாதேவபுராவில் உள்ள காமதேனு லேஅவுட் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையான குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த சில மாதமாக தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. பொது மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் லாரிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதா மாதம் தண்ணீருக்காக பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவாக அங்கு வசிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஓய்வு பெற்றவர்கள் தண்ணீருக்காக எங்களது சேமிப்பே கரைகின்றது என்று தங்களின் ஆதங்கங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அனைவரின் தேவையையும் பூர்த்தி செய்வது எங்களுக்கு கடினமாக உள்ளது. நாங்கள் நியாயமான கட்டணத்தை வசூலிகிறோம் என்று தண்ணீர் சப்ளை செய்பவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.