Latest News
வேலியே பயிரை மேய்ந்த கதை… பள்ளி சிறுமிகளுக்கு வார்டன் செய்த கொடூரம்… சரியான தண்டனை…!
21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விடுதி வாடகைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளியில் தங்கி படிக்கும் விடுதி 21 மாணவர்களுக்கு வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்திருக்கின்றது. விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் இந்திய ஆசிரியர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புலனாய்வு குழு விசாரணை செய்தது. அப்போதுதான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை அந்த வார்டன் பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதை பொருள் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வார்டனால் பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். விடுதி வார்டன் அத்துமிரல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் பள்ளியின் நட்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாணவர்களை அமைதியாக இருக்கும் படி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது அந்த பள்ளி வார்டனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது அனைவரிடமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.