Latest News
பாம்பு கடியால் இறந்த இளைஞர்… சடலத்துடன் பாம்பையும் வைத்து எரித்த கிராம மக்கள்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலத்துடன் உயிருள்ள பாம்பையும் வைத்து கிராம மக்கள் எரித்திருக்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் உள்ள பைகாமர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஷ்வர் ரதியா என்ற 22 வயதான இளைஞன் அவரது வீட்டில் படுக்கையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நுழைந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. உடனே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்று உயிரிழந்தார்.
இதையடுத்து கிராம மக்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரதியாவை கொன்ற விஷப்பாம்புவை கூடையில் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தனர். ரதியாவின் உடல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் அனைத்தும் நடைபெற்றது. அவரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கூடையில் பிடித்து வைத்திருந்த பாம்பை எடுத்து கிராம மக்கள் உயிருடன் எரியும் தீயில் வீசி இருக்கிறார்கள்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பாம்பு மற்றவர்களையும் கடித்து விடுமோ என்று பயந்து இப்படி செய்ததாக கிராம மக்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.