Connect with us

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… வைரல் புகைப்படம்…!

national

புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்த விஜய் சேதுபதி… வைரல் புகைப்படம்…!

மகாராஜா திரைப்படத்தின் மூலமாக தற்போது மீண்டும் புகழில் உச்சிக்கு சென்றிருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் நடித்து வருகின்றார். மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை செய்தது. விஜய் சேதுபதியின் கேரியரில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்கின்ற திரைப்படத்திலும், பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்ற நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனை சந்தித்தார்.

மரியாதை நிமித்தமாக ஆளுநர் கைலாசநாதனை சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கு சால்வை அணிவித்து, பூக்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல ஆளுநர் கைலாசநாதர் விஜய் சேதுபதிக்கு சால்வை அணிவித்தார். இவர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

More in national

To Top