national
ஆணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… அதிலிருந்து பார்த்து ஷாக்கான டாக்டர்ஸ்…!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹெர்னியா என்ற ஆபரேஷனுக்கு வந்த நபரின் வயிற்றுக்குள் கருப்பை இருப்பதை மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி என்பவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த ஒரு வாரமாக மிகுந்த வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவரை அவரது பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள்.
அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது அடிவயிற்றில் உள்ள சதை உள்ளுறுப்புடன் இணைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவருக்கு ஹெர்னியா எனப்படும் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போது அடிவயிற்றில் உள்ள சதை பகுதி உண்மையில் பெண்களுக்கு இருக்கும் கருப்பை என்பது தெரிய வந்துள்ளது.
முழுமையாக வளர்ச்சி பெறாத அந்த கருப்பையுடன் கருமுட்டை உருவாகும் ஓவரையும் இருந்திருக்கின்றது. ஆனால் ராஜ்கிரீடம் பெண் தன்மைக்கான கூறுகள் எதுவும் காணப்படாத நிலையில் இது அரிதினும் அரிதான வளர்ச்சி என்று மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். தற்போது ராஜ்கிரியின் கீழ் வயதில் இருந்த ஓவரி மற்றும் கர்ப்பப்பையை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மருத்துவ வரலாற்றிலேயே இப்படி இருப்பது இதுதான் முதன்முறை என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.