Connect with us

ஜூஸில் கலக்கப்பட்ட சிறுநீர்… கடையின் உரிமையாளரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

Latest News

ஜூஸில் கலக்கப்பட்ட சிறுநீர்… கடையின் உரிமையாளரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுத்திருப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

உத்தரபிரதேச மாநிலம், காசியாத் இந்திரிபுரி பகுதியில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை அன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. அதன் சுவை வித்தியாசமாக இருந்ததால் வாடிக்கையாளர் அது குறித்து விசாரித்து இருக்கின்றார்.

அப்போது ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும் அங்கு வேலை பார்ப்பவர்களையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர் இருவரையும் கைது செய்து இருக்கிறார்கள்.

மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவானது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

More in Latest News

To Top