Latest News
2 மகன்களுடன் சேர்ந்து கணவனையும்… 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை… தகராறில் அம்பலம்…!
30 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன்களுடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்று புதைத்த சம்பவம் அம்பலமாகி இருக்கின்றது.
உத்தரபிரதேசம் மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாபி சிங் என்பவர் தனது தாய், சகோதரர்கள் 2 பேர் சேர்ந்து 30 வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்கள். பஞ்சாப் சிங்க்கு பிரதீப் குமார், முகேஷ் குமார் என்று இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி சகோதரர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது பிரதீப் குமார், முகேஷ் குமார் இருவரும் பஞ்சாப் சிங்கை விரட்டி இருக்கிறார்கள். அப்போது 1994 ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்தது போல உன்னையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சாப் சிங்குக்கு தான் சிறுவனாக இருந்தபோது தன் முன்பு தனது தந்தையை தாய் ஊர்மிளாதேவி, சகோதரர்கள் பிரதீப் குமார், முகேஷ் குமார் ஆகியோர் கொலை செய்தது ஞாபகத்திற்கு வந்தது.
1994 ஆம் ஆண்டு ஊர்மிளாதேவி அதே பகுதியை சேர்ந்த ராஜ்வீர்சிங்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி ஊர்மிளாதேவியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து சென்றிருக்கின்றார். இது தொடர்பாக அவரின் கணவர் புத்தசிங் மனைவியை கண்டித்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று இரவு பஞ்சாப் சிங்கையும் அவரது இளைய சகோதரரையும் ஊர்மிளாதேவி பக்கத்து வீட்டுக்குச் சென்று தூங்குமாறு அனுப்பி இருக்கின்றார்.
நள்ளிரவு தூக்கம் வராமல் பஞ்சாப் சிங் தனது வீட்டிற்கு திரும்பி இருக்கின்றார். அப்போது ஊர்மிளாதேவி அவரது மகன்களான பிரதீப் குமார் முகேஷ் குமார் ஆகியோர் சேர்ந்து புத்த சிங்கை கொலை செய்து வீட்டு முற்றத்தில் புதைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கண்ட ஊர்மிளாதேவி, முகேஷ் குமார், பிரதீப் குமார் ஆகியோர் இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று பஞ்சாப் சிங்கை மிரட்டி இருக்கிறார்கள்.
இதனால் பஞ்சாப்சிங் அமைதியாக இருந்து விட்டார். காலங்கள் கடந்து ஓடிவிட்டது. 30 வருடங்களுக்கு முன்பு தாயும் இரண்டு சகோதரர்களும் சேர்ந்து தனது தந்தையை கொலை செய்ததை பஞ்சாப்சிங் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். புகாரின் பெயரில் போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்று சுமார் 8 ஆடி ஆழம் தோண்டி புதைக்கப்பட்டிருந்த புத்தசிங் உடலை கைப்பற்றி இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு மனித எலும்புக்கூடை கண்டெடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.