national
வரட்டா மாமே டூர்… மனு கொடுக்க சுற்றி வளைத்த மக்கள் பைக்கில் ஏறி தப்பி ஓடிய அமைச்சர்… வைரல் வீடியோ…!
மத்திய பாஜக அரசில் ஜவுளித்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜா சிங். இவர் தனது சொந்த தொகுதியான என்ற பெகுசாராய் தொகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் மனு கொடுக்க அவரை காரை மக்கள் சூழ்ந்த காரணத்தால் அதிலிருந்து இறங்கி பைக்கில் தப்பி செஞ்ச சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே பூங்கா ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக தனது காரில் வந்து கொண்டிருந்த கிரிராஜா சிங் அந்த பள்ளியை நெருங்கிய சமயத்தில் அங்கு அங்கன்வாடி பணியாளர்கள் வழிமறித்து தங்களது கோரிக்கைகளை கேட்கும்படி கோஷம் எழுப்பி இருந்தார்கள் .
அவர்கள் தங்களின் மனுக்களை அமைச்சரிடம் கொடுக்க நெருங்கிய போது காரில் இருந்து இறங்கி பைக் ஒன்றின் பின்னால் அமர்ந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். கிரிராஜ் சிங் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பி செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.