Connect with us

கருணாநிதியின் நினைவு நாணயம்… இதோட விலை 2500 ரூபாயாம்… மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்..!

national

கருணாநிதியின் நினைவு நாணயம்… இதோட விலை 2500 ரூபாயாம்… மத்திய நிதித்துறை அதிகாரி தகவல்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாணயம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விலை ரூபாய் 2500 என்று மதிய நிதித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழகம் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எம் கருணாநிதி என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு ஆசைப்பட்டது. இதற்காக ரூபாய் 100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சரிடம் முதலமைச்சர் கடந்த வருடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட்ட மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கடந்த 12ஆம் தேதி அதை மத்திய அரசு நாளிதழிலும் வெளியிடப்பட்டது. தற்போது ரூபாய் 100 மதிப்புள்ள நினைவு நாணயம் அதன் அமைப்பு, உள்ளடக்கம், விலை ஆகியவை குறித்து புது தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த நாணயத்தில் ஒரு பக்கத்தில் சிங்கத்தின் தலையிட கூடிய அசோக சின்னம், மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படம் கீழே அவர் பயன்படுத்திய தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம்பெறும். கலைஞர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு 1924 முதல் 2024 என தேவநாகரிகத்திலும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த 100 ரூபாய் நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், மீதம் 5% நிக்கல் துத்தநாகம் போன்றவை இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாணயத்தின் விலை 2500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாணயம் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.

More in national

To Top