Connect with us

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

Latest News

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சி காலத்துக்குள்ளாகவே அமல்படுத்துவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பதிவு செய்து வந்தது. தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் பாஜக சமர்ப்பித்தது. இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர் அவை ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.

தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகின்றது. பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில் 100-வது நாள் கொண்டாட்டத்தை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top