national
குடிபோதையில் கார் ஓட்டிய சிறுவன்… விபத்தில் கருவிலேயே சிதைந்த 9 மாத சிசு…!
குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்தார் கார் மோதியதில் கருவில் இருந்த ஒன்பது மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
குஜராத் மாநிலம் வதோரா பகுதியில் குடிபோதையில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த பகுதியில் ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாத கர்ப்பமாக இருந்திருக்கின்றார். இவர் தனது மனைவி மற்றும் ஆறு வயது குழந்தையுடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக குடிபோதையில் கார் ஓட்டி வந்த சிறுவன் நேராக வந்து அந்த பைக் மீது மோதி இருக்கின்றார். இதில் காயமடைந்த தீபிகா வயிற்றில் இருந்த குழந்தை பிறக்கும் முன்பே உயிரிழந்துள்ளது.
ரவி சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில் அவரின் ஆறு வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வரும் போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.