Latest News
35 அடி ஆழ்துளை கிணறு… 18 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை… வைரல் வீடியோ…!
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை 18 மணி நேரத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், டவுட்டா மாவட்டம் பண்டூகி என்ற இடத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை அங்கு இருக்கும் 35 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் போலீசார் அனைவரும் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
இதில் மீட்பு குழு அதிகாரிகள் கூறுகையில் “சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருக்கின்றது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு கேமரா மூலம் குழந்தையை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 18 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்பு பணியினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.