Connect with us

பள்ளியில் இருந்து வீடு திரும்பியும் மாணவியை தரதரவென இழுத்துச் சென்று… 5 பேரின் வெறிச்செயல்…!

Latest News

பள்ளியில் இருந்து வீடு திரும்பியும் மாணவியை தரதரவென இழுத்துச் சென்று… 5 பேரின் வெறிச்செயல்…!

பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை 10 பேர் தரதரவென இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் பழங்குடியினரை சேர்ந்த மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலை அருகே வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியை அங்கிருந்து புதிருக்குள் இழுத்துச் சென்றார்கள்.

பின்னர் 5 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இது தொடர்பாக பள்ளி மாணவி அடித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். குற்றத்தில் ஈடுபட நபர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குந்தி மாவட்ட துணை காவல் அதிகாரி வருண் ராஜக் தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.  தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு பெண் பாதுகாப்பாக வெளியில் சென்று வீடு திரும்புவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது. இது போன்ற சம்பவங்கள் பெற்றோர்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in Latest News

To Top