Connect with us

வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

national

வயநாட்டில் திடீர் நில அதிர்வு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்…!

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிஞ்சியர் மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு, குத்தி மலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கின்றது. மேலும் நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலஅதிர்வால் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இருப்பினும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக இன்று காலை கேரளாவில் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாத காரணத்தினால் எந்தவித ஆசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

More in national

To Top