Connect with us

என்ன கொடுமை இது… ? வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜின்… வைரல் வீடியோ…!

Latest News

என்ன கொடுமை இது… ? வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜின்… வைரல் வீடியோ…!

பீகாரில் வயல்வெளிக்குள் தன்னந்தனியாக நின்றிருந்த ரயில் இன்ஜினின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத் பூர் கிராமத்தின் அருகே வயல்வெளியில் சம்பந்தமே இல்லாமல் ரயில் எஞ்சின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதனை அதிசயமான நிகழ்வாக கிராம மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரயில் இன்ஜினை வைத்து வயலை உறுதி செய்யும் பணி எதுவும் செய்யப் போகிறார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்து விட்டோமா? என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இது குறித்து விசாரணை செய்ததில் வாசிர்கஞ் ரயில் நிலையத்திலிருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரயில் இன்ஜின் ஆனது கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்று விட்டதாக பின்னர் தெரிய வந்திருக்கின்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயில் அதிகாரிகள் தரப்பில் இது குறித்து சரியான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

More in Latest News

To Top