Connect with us

லட்டு குறித்து வீடியோ… பரிதாபங்கள் youtube சேனல் மீது தமிழக பாஜக புகார்…!

Latest News

லட்டு குறித்து வீடியோ… பரிதாபங்கள் youtube சேனல் மீது தமிழக பாஜக புகார்…!

லட்டு குறித்து சர்ச்சையான வீடியோவை வெளியிட்ட காரணத்தால் பரிதாபங்கள் youtube சேனல் மீது தமிழக பாஜக புகார் கொடுத்துள்ளது.

திருப்பதியில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல யுடியூபர்களான கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்திவரும் பரிதாபங்கள் என்ற youtube சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் இந்த வீடியோ வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது. லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் குழுவினர் தங்களது youtube சேனலில் சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்தார்கள். அதில் கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான வீடியோ முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டும் உருவாக்கப்பட்டது.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதல்ல. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டு இருந்ததால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியிருந்தார்.

பரிதாபங்கள் youtube சேனலில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைதள பக்கங்களில் இந்த வீடியோவை பலரும் பார்த்திருக்கிறார்கள். மேலும் பரிதாபங்கள் youtube சேனல் மீது ஆந்திரா டிஜிபி இடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாந்த் ரெட்டி புகார் கொடுத்திருக்கின்றார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது லட்டு பாவங்கள் என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கி இருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவு படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.

More in Latest News

To Top