ஆன்லைன் தரிசன டிக்கெட்… திருப்பதியில் லட்சக்கணக்கில் ஏமாற்றம்… மோசடி கும்பலுக்கு வலைவீச்சு…!

ஆன்லைன் தரிசன டிக்கெட்… திருப்பதியில் லட்சக்கணக்கில் ஏமாற்றம்… மோசடி கும்பலுக்கு வலைவீச்சு…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வழங்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டில் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

திருப்பதியில் பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக மாதம் தோறும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியாகி வருகின்றது. ஆன்லைன் தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஏழுமலையான் கோவில் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மூலம் டிக்கெட் வினியோகம் செய்து வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த குளறுபடி முறைகேடு ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆந்திர மாநில சிஐடி போலீசார், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் மோசடி குறித்து விசாரணையை செய்து வருகிறார்கள்.

இந்த விசாரணையில் 10,500 ரூபாய் செலுத்தி வாங்க வேண்டிய ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் 14, 499 ரூபாய் கொடுத்து 545 பேர் ஆன்லைனில் டிக்கெட் வாங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் 545 பேரும் இதுவரை 15 கோடியே 17 லட்சத்து 14 ஆயிரத்து 500 தரிசன டிக்கெட் ரூபாய் செலுத்தி தரிசன டிக்கெட் களை வாங்கி இருப்பதாகவும், ஒவ்வொருவரும் தலா 2 லட்சத்து 78 ஆயிரத்து 378 ரூபாயை தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் இடைத்தரகர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் வாங்கிய டிக்கெட்டுகளுடன் தரிசனத்திற்காக அடுத்த முறை வரும்போது அவர்களை பிடித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஏராளமான பக்தர்கள் போலியான அட்டைகளை பயன்படுத்தி தரிசன டிக்கெட் மட்டும் ஆர்ஜித சேவை டிக்கெட் தங்கும் வரை வாங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.