Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News national

திருப்பதி லட்டு விவகாரம்… சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் மிக பிரபலமான கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். தற்போது நாடு முழுவதும் உள்ள பக்தர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆளாகிய சம்பவம் திருப்பதியில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக கூறப்படும் விஷயம்தான்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக தலைவர் சுப்பிரமணியசுவாமி மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி-ஆன திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் ஒய் வி சுபா ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை நீதிபதிகள் விஸ்வநாதன் மற்றும் கவாய் ஆகியோர் விசாரணை செய்தனர்,

அப்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மனுத்தாக்கல் செய்ய சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி வழங்கியது யார்? என்று ஆந்திரா அரசு கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி கூறும் போது திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் கருத்து வெளியிட்டது ஏன்? லட்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டது என்றால் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. இதில் அரசியல் செய்யக்கூடாது. சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் அதனை தெரிவிக்க வேண்டும். கலப்பட நெய்யில் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான பதிலே இல்லை. பிரசாதத்தில் கலப்படம் இருப்பது உறுதியாகாத நிலையில் கருத்து வெளியிட்டது ஏன்? என்று கண்டனம் தெரிவித்திருக்கின்றார். கடவுள் விவகாரத்தில் ஆந்திர அரசு அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.