கிளம்பியது அடுத்த சர்ச்சை… திருப்பதி லட்டில் குட்கா புகையிலை… வீடியோ எடுத்து வெளியிட்ட பக்தர்…!

கிளம்பியது அடுத்த சர்ச்சை… திருப்பதி லட்டில் குட்கா புகையிலை… வீடியோ எடுத்து வெளியிட்ட பக்தர்…!

திருப்பதியில் குட்கா புகையிலை இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆந்திராவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களாக அதாவது கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலந்திருந்ததாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இது அதிகாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் சரி செய்யப்பட்டு தூய நெய் கொண்டு லட்டுகள் தயாரிக்கப்படுவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்று இருக்கின்றார்.

அங்கு உறவினர்களுக்கு கொடுப்பதற்காக லட்டுவை வாங்கி இருக்கின்றார். அதை உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்கும் போது அதில் புகையிலை பொருட்கள் உதிர்வதை கவனித்திருக்கின்றார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை திருப்பதி தேவஸ்தான முற்றிலுமாக மறுத்து இருக்கின்றது. மேலும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.