Latest News
திருப்பதியில் லட்டில் இந்த பொருட்கள் கலந்து இருக்காங்களா…? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!
திருப்பதியில் மாட்டிறைச்சி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி இருக்கின்றது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பேசிய அவர் கூறியிருந்ததாவது “கோடிக்கணக்கான பக்தர்களின் மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனுக்கும் ஒய் எஸ் ஆர் காங்கிரசுக்கும் வெட்கப்பட வேண்டும்.
திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் லட்டுவின் தரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்துவதற்கு உத்தரவிட்டோம் என தெரிவித்திருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினை தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கால்நடை தீவனம் மற்றும் பால் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வு அறிக்கையில் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட பொருட்கள் இருந்ததாக தெரியவந்திருக்கின்றது. இந்த ஆய்வறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.