national
திருப்பதியில் லட்டு தயாரிக்க தாமஸ்க்கு ஒப்பந்தமா…? தேவஸ்தானம் கொடுத்த பதில்…!
திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்காக தாமஸ் என்கின்ற வரை ஒப்பந்தம் செய்ததாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் திருப்பதியில் லட்டு தயாரிப்பது தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான பிரச்சாரங்களை குறித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மேலும் பல நூற்றாண்டுகளாக திருப்பதி கோயிலில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களால் தயாரிக்கப்பட்டு வரும் லட்டு தான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிகச்சிறந்த தரத்துடன் தயாராகி வருகின்றது.
பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம். லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பிரச்சாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகிறார்கள். பழங்காலத்திலிருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான கடமைகளை அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்களில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுக்களை தயாரிக்கவும், லட்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை சேகரிக்கவும் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.