Connect with us

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினர்… தடுத்து நிறுத்திய BSF… வைரலாகும் வீடியோ…!

national

இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினர்… தடுத்து நிறுத்திய BSF… வைரலாகும் வீடியோ…!

வங்காள தேசத்தில் ஏற்பட்ட கலவரம் வன்முறையாக வெடித்து ஏராளமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த சேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கின்றார். தற்போது வங்காளதேசத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருக்கின்றது. மேலும் நோபல் பரிசு வென்ற முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஒன்று தற்போது தலைமை வகித்திருக்கின்றது.

சிறைகள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான கைதிகள் வெளிவந்த நிலையில் இன்னும் அங்கு கலவரம் மட்டும் ஓய்த்தபாடில்லை. கடந்த மூன்று நாட்களில் மட்டுமே 232 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிறுபான்மையரான இந்துக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படுவது அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளதால் இந்திய எல்லை பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள கூச்ச போகர் என்ற மாவட்டத்தை ஒட்டிய வங்கதேச எல்லை வழியாக நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்று இருக்கிறார்கள்.

காலை 9 மணி அளவில் எல்லையில் உள்ள சகர்திகி ஆற்றில் இறங்கி இரு நாடுகளை பிரிக்கும் எல்லை வேலிக்கு 400 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் ஆற்றில் இறங்கி இந்தியாவிற்குள் நுழைய தயாராக இருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்திய வங்காளதேச தடுக்கும் பணிகளை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

More in national

To Top