national
திருடப்போன இடத்தில்.. சாவகாசமா பக்கோடா போட்டு சாப்பிட்ட திருடர்கள்… ஷாக்கான போலீஸ்…!
திருட போன இடத்தில் திருடர்கள் சாவுகாசமாக பக்கோடா போட்டு சாப்பிட்டு திருடிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்பட்டு இருக்கின்றது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 24 மணி நேரத்திற்குள் நகரின் பல்வேறு பகுதிகளில் திருட்டு கும்பல் வீடுகளுக்குள் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பணம், நகை, பொருட்கள் போன்றவற்றை திருடி கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அந்த வகையில் பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் சென்ற திருடர்கள் சாவகாசமாக பக்கோடா சமைத்து சாப்பிட்டு பின்னர் பாத்ரூமில் சிகரெட் பிடித்தும், பான் பீடா போட்டு எச்சிலை துப்பியும் திருடி வைத்திருக்கிறார்கள். இதுபோல ஒரே பகுதியில் திருட்டு சம்பவம் நடந்த 6 முதல் 7 வீடுகளில் ஒரே மாதிரியாக திருடர்கள் திருடி சென்றிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து போலீசார் அனைத்து திருட்டுகளையும் செய்தது ஒரே கும்பல் தான் என்று தீவிரமாக தேடி வருகிறார்கள். போலீசில் சிக்காமல் தண்ணி காட்டி வரும் பக்கோடா திருட்டு கும்பலை போலிசா தீவிரமாக தேடி வருகிறார்கள்.