national
ஏடிஎம் உடைக்கல, ஆனாலும் பணத்தை எடுத்து சிறுவர்கள்… எப்படி மாட்டிக்கிட்டாங்க தெரியுமா..?
தெலுங்கானா மாநிலம், வராங்கல் என்ற பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வித்தியாசமான முறையில் சிறுவர்கள் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் செவிக்காலை பயன்படுத்தி கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு பணம் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடித்து இருக்கின்றார். சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை எடுப்பதற்கு திட்டமிட்டு இருக்கின்றார்.
அதன்படி ஏடிஎம்மில் பணம் வெளியில் வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்டிப்பர்களை ஃபெவிகால் கொண்டு அவரும் அவரது நண்பரும் ஒட்டி இருக்கின்றார். இதனால் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் நபர்கள் பணம் வெளியில் வராமல் இருந்ததை பார்த்து ஏடிஎம்மில் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள்.
பின்னர் உள்ளே செல்லும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்டெப்பரை வெளியில் எடுத்து ஏடிஎம்மில் சிக்கிக்கொண்ட பணத்தை வெளியில் எடுத்திருக்கிறார்கள். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பலமுறை சிறுவர்கள் இது போன்று பணத்தை திருடி இருக்கிறார்கள். இதை எடுத்து வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஏடிஎம்மில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மூன்று சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.