Latest News
பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடர்கள்… தனி ஆளாக தடுத்து நிறுத்திய பெண்மணி… வைரல் வீடியோ..!
பட்டப்பகலில் வீட்டுக்குள் திருடர்கள் நுழைய முயன்ற நிலையில் ஒற்றையாளாக பெண்மணி தடுத்து நிறுத்திய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப் பகலில் வீட்டுக்குள் நுழைய முயன்று திருடர்களை உள்ளே நுழைய விடாமல் வீட்டின் கதவை உள் பக்கமாக தாப்பாளிட்டு பிடித்துக் கொண்டு பெண் போராடும் சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. வியாழன் கிழமை பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள வெர்கா பகுதியில் பட்ட பகலில் வீட்டு ஒன்றில் மூன்று கொள்ளையர்கள் நுழைய முயற்சி செய்கிறார்கள்.
உள்ளூர் நகை வியாபாரி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டை நோட்டமிட்ட அந்த மூவரும் வீட்டிற்குள் வர முயற்சி செய்கிறார்கள். அவர்களை அந்த வீட்டிலிருந்த பெண் கவனித்து அவர்கள் உள்ளே வராதபடி கதவை அடைத்து நின்று போராடுகின்றார். இதையடுத்து சோபாவை இழுத்து வழியை அடைத்ததாலும் அந்த பெண் கூச்சலிட்டு கத்தியதாலும் உள்ளே நுழைய முயன்ற திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் திருடர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். அங்கிருந்து சிசிடிவி பதிவில் இது தொடர்பான சம்பவம் பதிவாகி இருந்தது. இதற்கிடையே ஒற்றை பெண்மணியாக திருடர்களை தடுத்து நிறுத்திய அந்த பெண்ணுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
Robbers tried to loot a house, But the robbers could not do anything in front of the Brave Woman present in the house. The brave woman single-handedly overpowered three robbers🫡, Amritsar
pic.twitter.com/NQuAwauAYf— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 1, 2024